தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஆயத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

16TH_JALLIKATTU5_894663gஅலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் ‌ஆய்வு மேற்கொண்டார்.

 நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து சோதனைகளுக்கு பிறகு தகுதியான காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க வரும் மக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ உதவிக்கென மருத்துவ நிபுணர்கள், 15 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின் படி, ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதுகாப்பான முறையில் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...