Designed by Iniyas LTD
அலுவலகங்கள் மூலம் முறையாக பொறியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் – வைகோ
தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர்கள் பணி நியமனத்தில் நடந்துள்ள முறைகேடான நேர்காணலை ரத்து செய்ய வேண்டும்.
என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 180 இளநிலை பொறியாளர்கள் பணி இடங்களுக்கு 13 ஆயிரத்து 500 பேருக்கு அவசர அவசரமாக அழைப்பு அனுப்பி, கண் துடைப்பாக ஒரு நேர்காணலை நடத்தி முடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சிக்கு நெருக்கமான அதிகாரிகள் இந்த நேர்காணலை நடத்தி இருப்பதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இந்த நேர்காணலை ரத்து செய்து விட்டு, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முறையாக தேர்வு செய்து, பொறியாளர்களை நியமிக்கப்பட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் பொறியாளர் பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சமூக நீதியையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.