தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அல் கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் மீது வான் தாக்குதல்

ஏமன் நாட்டில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அல் கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் செயல்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகம், பென்டகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  att

அதைத்தொடர்ந்து அந்த பயிற்சி முகாமை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் அந்த பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது. அல்கொய்தா தீவிரவாதிகள் பலர் பலியாகினர்.  இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் கூறுகையில், “நாங்கள் ஏமனில் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஏராளமாக அழிக்கப்பட்டுள்ளனர். இது அந்த இயக்கத்துக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது” என குறிப்பிட்டார்

Comments
Loading...