Designed by Iniyas LTD
அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் புகுந்துள்ள 157 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் நடத்திய விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.அந்தநாட்டின் சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த அகதிகளின் படகுகளில் முதலில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்ட வேளையில், அவர்களுக்கு உயிர்காக்கும் படகுகளை வழங்கி இந்தியாவுக்கு திரும்பி செல்லுமாறு வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அகதிகளை சட்டவிரோதமானவர்கள் என்று அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கூறுகின்றமைக்கும் இதன் போது சட்டத்தரணிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் வந்த அகதி அந்தஸ்த்து கோருவது சட்டவிரோதமான செயற்பாடு இல்லை.
எனவே இலங்கை அகதிகளை சட்டவிரோதிகள் என்று கூறுவதன் மூலம் அவுஸ்திரேலியாவின் அமைச்சர் ஸ்கொட் மொரிசன் சட்ட விரோதமான செயற்பாட்டை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறான நிலையில் தாங்கள் அவுஸ்திரேலியர்கள் என்று கூறிக்கொள்வதில் வெட்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுலோகங்களை தாங்கி இருந்தனர்.