தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் மனோரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளனர்

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் மனோரீதியாக மிகவும் பாதிப்படைந்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. டோனி எபட் தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம், அகதிகள் தொடர்பில் புதிய சட்டத்திட்டங்களை உருவாக்கி இருக்கிறது.  asylum

இதன் கீழ் அகதிகள் நவுரு மற்றும் பப்புவா நியுகினி போன்ற தீவுகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கிறிஸ்மஸ் தீவிலும், விளாட் முகாமிலும் இலங்கை அதிகள் தொடர்ந்து பல வருடங்களாக வசிக்கின்றனர். அவர்களுக்கான அகதி அந்தஸ்த்து வழங்கும் செயற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லாத நிலையில், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

சிறுவர்களின் கல்வி செயற்பாடுகள் மற்றும் எதிர்காலங்கள் குறித்த கவலையில் பெற்றோர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் மனோ ரீதியாக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...