Designed by Iniyas LTD
அவுஸ்திரேலியாவில் கொலைசெய்யப்பட்ட தாயகத் தமிழரின் உடல் 7 மாதங்களின் பின்னர் சிறீலங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது
அவுஸ்திரேலியாவில் கொலைசெய்யப்பட்ட தாயகத் தமிழரின் உடல் 7 மாதங்களின் பின்னர் சிறீலங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த சிவபெருமான் கேதீஸ்வரன் (வயது 36) என்ற இரு குழந்தைகளின் தந்தை- வேலை நிமித்தம் அவுஸ்திரேலியாவிற்குச் சென்றிருந்த சமயம் இலங்கையைச் சேர்ந்த சிலரால் கொலைசெய்யப்பட்டார்.
இவரது உடலை பெற்றுக்கொள்வதற்கு உறவினர்கள் எவ்வளவோ முயற்சிசெய்தும் பலனளிக்காத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடாக அவுஸ்திரேலிய வாழ் தமிழ் உறவுகள்- தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அவுஸ்திரேலிய கிளை மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் நேற்று கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.