தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அவு அரசால் நாடுகடத்தப்பட்ட 16 தமிழர்கள் கைது!

arrest-slk.polce_21 சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்றமையால் அந்நாட்டு விசேட விமானத்தின் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 16 இலங்கைப் பிரஜைகளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (23) கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கடந்த 2012ஆம் ஆண்டு சட்டவிரோமான முறையில் படகு மூலம்; அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.

வாழைச்சேனை, உடப்பு, மட்டக்களப்பு, சிலாபம், வென்னப்புவ, களுவாஞ்சிக்குடி மற்றும் ஆண்டிமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29, 33 மற்றும் 40 வயதுக்குட்டவர்களே இவ்வாறு அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Comments
Loading...