Designed by Iniyas LTD
அவெஞ்சர்ஸ் அடுத்த பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு….
ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலகில் பல சினிமா ரசிகர்களையும் கவர்ந்த சூப்பர் ஹீரோக்களை இணைத்து உருவாக்கப்பட்ட அவெஞ்சர்ஸ் திரைப்படம் சூப்பர் ஹீரோ ரசிங்கர்களை வெகுவாக கவர்ந்தது.
இதன் தொடர் பாகங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை வெகுவாக பெற்றுவந்தது.
இந்த அவெஞ்சர்ஸ் திரைப்பட வரிசையில் கடைசியாக இன்ஃபினிட்டி வார் திரைப்படம் உருவாக்கி உலகம் முழுக்க மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.
இந்தநிலையில் அதன் அடுத்த பாகம் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தற்போது அதன் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
அதற்கு அவென்ஜ்ர்ஸ் எண்டுகேம் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 26இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
