Designed by Iniyas LTD
ஆக்கிரமிப்புகள் மக்களிடம் திணிக்கப்படுகிறது!
நல்லாட்சி என்று கூறப்படும் சூழலிலும் பல்வேறு விதமான ஆக்கிரமிப்புக்கள் எம் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டு வருகின்றதென யாழ். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத் தலைவர்களில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மௌனமான ஆக்கிரமிப்புக்கள் எமது மண் மீதும் மக்கள் மீதும் மறைமுகமாக திணிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் சேவை வழங்கும் திணைங்களங்களில் பெரும்பான்மையின அதிகாரிகளே உயர்பதவியை நிர்வகிக்கின்றனர்.
கிளிநொச்சி நகரப்பகுதியில் மட்டும் நாற்பது வீதமான நிலப்பகுதி தற்போதும் இராணுவத்தினரின் வசமுள்ளன என்றார்.