Designed by Iniyas LTD
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. பங்களாதேஷின் மிர்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறக்கப்பட்டனர். நிதான ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் தவான் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்தார். பொறுப்புடன் விளையாடிய ரோகித் ஷர்மா அரைசதம் கடந்து 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த தினேஷ் கார்த்திக், ரகானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்தர ஜடேஜா களமிறங்கினர். நிதானமாக விளையாடிய அம்பத்தி ராயுடு அரைசதம் கடந்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீர ர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 245 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில், 9 விக்கெட் இழப்பில் 249 ரன்களை எடுத்து வெற்றிப்பெற்றது.