Designed by Iniyas LTD
ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்கும் நீரஜ் சோப்ரா…
ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்க உள்ளார் இந்திரவீரர் நீரஜ் சோப்ரா.
இவர் ஈட்டி எரித்தலில் தங்கம் வெல்வாரா? என அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றாகள்.
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பெங் நகரங்களில் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று 3 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
அதேபோல 100 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்தும் , 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமாதாஸ் மற்றும் முகமது அன்ஸ்யகிய ஆகியோரும் வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுள்ளனர்.
9-வது நாளாக இன்றும் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் ஈட்டி எரியும் பந்தயத்தில் நீரஜ் சோப்ரா மீது அனைவரும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.