Designed by Iniyas LTD
ஆதார் எண் பரிசீலனை ஆகஸ்ட் – 15 வரை நீடிப்பு
தமிழக வருவாய்த்துறை செயலாளர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில் மக்களுக்கு ஆதார் எண்ணை அரசு வழங்கி வருகிறது. அதற்காக புகைப்படம் மற்றும் சில தகவல்களை கொண்ட பேப்பர் தற்காலிகமாக தரப்படுகிறது.
இதை அட்டையாக வழங்குவதற்கு முன்பு அனைத்து தகவல்களையும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக வீடுதோறும் சென்று சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் இம்மாதம் 15-ந் தேதியோடு முடிப்பதாக இருந்தது. ஆனால் பணிகளை ஆகஸ்டு மாத இறுதி வரை நீட்டிக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியாகியுள்ளது.