தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆபத்தான கண்ணிவெடியால் கிளிநொச்சி- முரசுமோட்டை மக்கள் அச்சம்…

கிளிநொச்சி- முரசுமோட்டை ஐயன் கோவிலடியில் வீதி புனரமைப்பின்போது ஆபத்தான இரு கண்ணிவெடிகள் பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை பாதுகாப்பற்ற ஒரு இடத்தில் துாக்கிவைத்துள்ளனா்.

அதனை அங்கிருந்து அகற்றாமையினால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறும் பிரதேச மக்கள் மேலும் கூறுகையில், வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டவர்கள் குறித்தவெடி பொருட்களை பாதுகாப்பற்ற ஓரிடத்தில் வைத்துள்ள நிலையில் குறித்த வீதியை இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதுகாப் பற்ற வகையில் போடப்பட்டுள்ள மேற்படி வெடிபொருளால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments
Loading...