Designed by Iniyas LTD
ஆபத்தின் விளிம்பில் வட்டுவாகல் பாலம்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் காணப்படும் வட்டுவாகல் பாலமானது மிகவும் சேதமடைந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் காணப்படுகிறது
மிகவும் மக்கள் நடமாட்டம் உள்ள வீதியாக காணப்படும் இந்த வீதியில் குறித்த பாலமானது திருத்தப்பட வேண்டும் எனபல தரப்பினராலும் பல தடவைகள் கோரிகைவிடப்பட்டிருந்தது.
எனினும் குறித்த பாலத்துக்கு பாரிய நிதி ஒதுக்கீடு தேவை என திருத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாழிரங்கியும் காணப்படுகிறது
தற்போது குறித்த நீரேரியில் அதிக நீர் நிரம்பி காணப்படும் நிலையில் தற்காலிகமாகவேனும் வீதியில் திருத்தங்கள் மேற்கொண்டு உதவ மக்கள் கோரும் அதேவேளை குறித்த பாலத்தினூடாக அவதானமாக போக்குவரத்து செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.