தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆப்கானிஸ்தானின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள  தலிபான் பயங்கரவாதிகள்   போட்டி அரசு  ஒன்றை நடத்தி வருகிறது.

இதன் காரணமாக  அவ்வப்போது அங்கே  இடம்பெறும்  தலிபான்களின் தாக்குதலால்  பொதுமக்களும் காவல் அதிகாரிகளும் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நேற்று இரவு ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது.

இந்நிலையில்; அங்கு இடம்பெற்ற  பயங்கரவாதிகளின் தாக்குதலில்  அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 43 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...