Designed by Iniyas LTD
ஆப்கானிஸ்தானில் தலிபான் மனித வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் பஹ்ராம் ராணுவ விமான நிலையம் அருகே தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் நோட்டோ படையினர் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் காபுல் புறநகர் பகுதியான பஹ்ராம் ராணுவ விமான நிலையம் அருகே நேட்டோ- ஆப்கான் படைகளை சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த தலிபான் மனித வெடிகுண்டு பயங்கரவாதி தன்மீது கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இதில் 5 நேட்டோ படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஆப்கானிஸ்தான் போலீஸார் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.