தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆப்பிரிக்கா மாலி நாட்டில் புலான் தீவிரவாத குழு தாக்குதல்

ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் பல தீவிரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனவே, அங்கு ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ளது. தேவைப்படும்போது பிரான்ஸ் ராணுவத்தை அனுப்பி உதவி வருகிறது.  மாலி நாட்டில் உள்ள நம்பாலா நகரில் ராணுவதளம் உள்ளது.pulan

நேற்று அங்கு புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு ராணுவம் தாக்கியதை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. 17 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு புலான் தீவிரவாத குழு பொறுப்பு ஏற்றுள்ளது. அதே நேரத்தில் ஆன்சார்டின் தலைமையிலான மற்றொரு தீவிரவாத குழுவும் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் இப்ராகிம் பயுபகர் கெய்டா பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டியுள்ளார்.

Comments
Loading...