தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆம் ஆத்மி கட்சி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வில்லை- சுஷில் குமார் ஷிண்டே

கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வில்லை என்று மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.ஷின்டே

சோலாபூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுஷில் குமார் ஷிண்டே “டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. ஆனால் ஆம் ஆத்மி டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கிடைத்த நல்ல வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் தவறு இல்லை” என்று கூறினார்.

மேலும், செய்தியாளர்கள் டெல்லியில் கேஸ் விலை உயர்வு குறித்து முகேஷ் அம்மானி உள்ளிட்டோர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஷிண்டே, டெல்லி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர் என்று கூறினார்.

Comments
Loading...