தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆயகலைகள் 64 கினையும் தரும் கலைமகளை போற்றுவோம்..

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்…

அள்ள அள்ள குறையாத செல்வம் கல்வி செல்வம் அதை வழங்குவது சரஸ்வதி தேவி.

சரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி. வெண் பட்டுயுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள்.

கல்வி, ஞானம், கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும். சரஸ்வதி தேவி மூல மந்திரம், அஷ்டோத்ர நாமம், நாமாவளி, சுலோகம் கூறி வழிபடலாம்.

இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் “ஓம் சரஸ்வதியே நம !”என 108 தடவை சொல்லலாம். சரஸ்வதிகுரிய  பாடல்கள் பாடியும் வணங்கலாம்.

புதன் கிழமை காலையில்  கிழக்கு நோக்கி அமர்ந்து, சரஸ்வதி 12 நாமங்களை சொன்னால், கல்வி முன்னேற்றம் ,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும்.

மாணவர்கள், பணி புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் உயரவும், இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம்.

நெய்வேத்தியம்

சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை சுண்டல், வடை, பாயாசம் செய்து வழிப்படலாம். இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் கல்கண்டு, பேரீச்சம் பழம் ஏதாவது வைத்து வணங்கலாம்.

64 கலைகளும் பெறவும்  சகல நலங்கள் பெறவும் இந்நாளில்  சரஸ்வதியை போற்றி புகழ் பாடுவோம்.

Comments
Loading...