Designed by Iniyas LTD
ஆய்வு பணிக்காக ஆஸ்திரியாவுக்கு செல்லவுள்ள பாண்டா கரடி..
தென்மேற்கு சீனா சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வோலாங் தேசிய பூங்காவில், யுயான் யுயான் என்ற 20 வயது பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வருகிறது.

குறும்பு தனமும் சற்று பயந்த சுபாவமும் கொண்ட இந்த பாண்டா கரடி, தற்போது ஆய்வு பணிக்காக ஆஸ்திரியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த கரடிக்கு முறையே மருத்துவ பரிசோதனை முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் உள்ள யாங் யாங் எனும் பாண்டா கரடியுடனான இனப்பெருக்கத்துக்காக அங்கு அழைத்து செல்லப்படுகிறது.
ஈநிலையில் 4 ஆண்டுகளுக்கு பின் கரடிகள் அவை குடும்பமாக சீனாவுக்கு அழைத்து வரப்படும் என சீனாவின் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.