Designed by Iniyas LTD
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி மூலம் தேர்வு
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 230 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டன.
சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்தப்பணியின் போது, 1100 இயந்திரங்களில் இருந்து 460 இயந்திரங்களும், 300 கட்டுப்பாட்டு இயந்திரங்களில் இருந்து 230 இயந்திரங்களும் கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டன.
மேலும் இவற்றோடு, அவசரத் தேவைக்காக 15 சதவிகித இயந்திரங்கள் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர் தலைமையில், தேர்தல் அலுவலர் சவுரிராஜன் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் நாளை 2-ம் கட்டப் பணி நடைபெற உள்ளது அப்போது எந்த வாக்குச் சாவடிகளுக்கு எந்த இயந்திரங்கள் என்பது முடிவு செய்யப்படும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் ஜோதிகலாஷ் தெரிவித்துள்ளார்.