Designed by Iniyas LTD
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது; 74.4 சதவிகிதம் பதிவாகியதாக தகவல்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 74.4 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 230 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74.4 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
ராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வரும் 30 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 100 துணை ராணுவ படையினர் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.