Designed by Iniyas LTD
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக அமைச்சர்கள் தீவிர பரப்புரை
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவுக்கு ஆதராவாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஏழுமலை, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இதேபோல தண்டையார் பேட்டை குமரன் நகர் பகுதியில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை மேயர் சைதை துரைசாமி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.