தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆறு இலங்கையர்கள் சவூதியில் மாயம்?

article_1490438301-image_1490374734-a4253dffb8சவுதி அரேபியாவில் பணி புரிந்து வந்த 6 இலங்கையர்கள், அங்கு காணாமல் போயுள்ளனரென, அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பணியகத்தின் ஊடகச் செயலாளர் நளின் ராஜபக்ஷ தெரிவித்தார். அக்கறைப்பற்றைச் சேர்ந்த எம்.எச்.றிப்னாஸ், இரத்தினபுரியைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். ஷாஜஹான், கிருல்லவைச் சேர்ந்த பி.ஜி. காமினி, ஆதிமலையைச் சேர்ந்த கே.பி.கே சந்திராவதி, கல்லடியைச் சேர்ந்த என்.எப்.றீடா மற்றும் கலேன்பிடுனுவெவவைச் சேர்ந்த பி.ரி. மொஹமட் றியாஸ் ஆகியோரே காணாமல் போயுள்ளனரென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்கள், 2004 இலிருந்து 2014 வரையான காலப்பகுதிக்குள் வேலை நிமித்தம் சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சவுதி அரேபியாவில் தொழில் புரியும் புலம்பெயர் இலங்கையர்கள் உட்பட பொது மக்கள் எவருக்காவது, இவர்கள் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், 011 4379328 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.

Comments
Loading...