Designed by Iniyas LTD
ஆறு மாகாண சபைகளுக்குத் தேர்தல் இடம்பெற வாய்ப்பில்லை என்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா
ஆறு மாகாண சபைகளுக்கு இந்த ஆண்டில் தேர்தல் இடம்பெற வாய்ப்பில்லையென உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த முன்னர் எல்லை நிர்ணய அறிக்கை விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். பழைய முறையிலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு நாம் இணங்கியுள்ளதாக ஊடங்களில் வெளியான செய்திகள் தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
தானோ அல்லது ஜனாதிபதியோ பழைய முறையில் தேர்தலை நடாத்த இணங்கவில்லை என்றும் .மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமையப் புதிய முறையில் தேர்தலை நடாத்த நாம் கடமைப்பட்டுள்ளஹாகவும், அதற்காக .துரிதமாக எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆனால் அது நடைபெறவில்லை என்றும் கட்சித் தலைவர்கள் இதுபற்றி முடிவெடுக்கவில்லை.பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்றால் கூட அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.