Designed by Iniyas LTD
ஆற்றிலிருந்து ஆணின் உடல் மீட்பு!
ஸ்ரீலங்காவின் கெசல்கமுவ ஓயா ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆணின் சடலமொன்றை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் திடீரென பெய்த கடும் மழையில் பெருக்கெடுத்த ஆற்று வெள்ளத்தில் இச்சடலம் அடித்து வந்திருக்கலாமென தெரிவித்த பொலிஸார், சடலம் இதுவரை அடையாளம் காணவில்லையொன்றும் தெரிவித்தனர்.