தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆற்று மணல் அள்ளுதல் 3 ஆண்டுகளில் நிறுத்தப்படும்: முதலமைச்சர் பழனிச்சாமி

3 ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் அதில் பேசியதாவது:- அடுத்த 3 ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும். ஆற்று மணலுக்கு பதிலாக மக்கள் எம். சாண்டை பயன்படுத்த வேண்டும். மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டால் நிலத்தடி நீர் உயரும். மணல் சேமிப்பையும், மணல் அள்ளுவதையும் அரசே ஏற்று நடத்தும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...