Designed by Iniyas LTD
ஆலங்குளத்தில் சசிகலா பேனர் கிழிப்பு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அவரது தோழி சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதை வாழ்த்தி அவரது படத்துடன் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அந்த பேனரில் இருந்த சசிகலா படத்தை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர்.
இன்று காலையில் சசிகலா படம் கிழிக்கப்பட்டிருந்ததை கண்ட அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே சசிகலா பதவியேற்பை முன்னிட்டு ஆலங்குளத்தில் நடந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இந்நிலையில் சசிகலா படமும் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலங்குளம் நகர அ.தி.மு.க.வினர் மத்தியில் சசிகலாவிற்கு தீவிர எதிர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.