Designed by Iniyas LTD
ஆவணம் இல்லா 15இலட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல்
தமிழகத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 
உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வேலூர் மாவட்டம் வள்ளிமலைப் பகுதியில் கைப்பற்றப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய வாகன சோதனையில் இந்த பணம் கைப்பற்றப்பட்டது. ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழைந்த காரை சோதனையிட்டபோது, காரை ஓட்டிவந்த ஹேமசந்திரா என்பவரிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லப்பட்டதால், இதே போல் பல்வேறு இடங்களில் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.