தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆவா குழு பாணியில் மற்றொரு குழு யாழில் அடாவடி…

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகுட்பட்ட உடுவில் மல்வம் பகுதியில் உள்ள 3 வீடுகளுக்குள் புகுந்து கும்பல் ஒன்று ஆவா குழு பாணியில் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“3 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் கொண்ட கும்பல்   முகமூடி அணிந்திருந்ததோடு . நீளமான வாள்கள், பொல்லுகள் மற்றும் கம்பிகளை  வைத்திருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீடு ஒன்றின் வளவுக்குள் புகுந்து கும்பல், முற்றத்தில் நிறுத்திவைக்க்பட்டிருந்த முச்சக்கர வண்டியை அடித்து சேதப்படுத்தியதோடு,.  வீட்டுக்குள்ளிலிருந்த கதிரைகள், யன்னல் கண்ணாடி போன்றவற்றை அடித்து உடைத்தது தப்பி சென்று விட்டதாக முறைப்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கும்பலுக்கும் குடும்பம் ஒன்றுக்கும் இடையே நீடித்த காதல் விவகாரத்தால் எழுந்த முரணபாட்டை அடுத்தே இந்த வன்முறை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்வம்தொடர்பில்  சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த குழு ஆவா குழு இல்லை என்றும்,. அவர்களின் பாணியில் வேறு ஒரு கும்பல் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.

Comments
Loading...