தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டி ரோ!

Australia v West Indiesஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3–ந்தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்திருந்தது.

2–வது நாள் ஆட்டத்தின் போது அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து இருந்தபோது மழையால் பாதிக்கப்பட்டது. 3–வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதேபோல நேற்றைய 4–வது நாள் ஆட்டமும் பலத்த மழையால் ரத்து செய்யப்பட்டது. 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 330 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது.

பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. துவக்க வீரர் பர்ன்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 72 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 90 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து இருந்தது.

மழை நின்றபிறகு தொடர்ந்து ஆடிய வார்னர் சதம் அடித்தார். 82 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார். அணியின் ஸ்கோர் 154 ரன்களாக இருந்தபோது மார்ஷ் (21) தனது விக்கெட்டை இழந்தார். ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிந்தது. இதனால் இந்தப்போட்டி ‘ரோ’ ஆனது. வார்னர் 122 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற்று இருந்ததால் ஆஸ்திரேலியா 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Comments
Loading...