Designed by Iniyas LTD
இங்கிலாந்தின் லிவர்பூல் கால்பந்து வீரர் ஸ்டீபன் அணியில் இருந்து விலகுகின்றார்
இங்கிலாந்தின் பிரபலமான லிவர்பூல் கால்பந்து அணியின் தலைவரான ஸ்டீபன் ஜெரார்ட் வரும் கோடைகாலத்துடன் அந்த அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரும் கோடைகாலத்துடன், லிவர்பூல் அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால், அவர் ஏற்கனவே ஒரு வெளிநாட்டு அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கும் முன்னர் தலைவராக இருந்த ஜெரார்ட், 1998 ஆம் ஆண்டு முதல் லிவர்பூல் அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.
லிவர்பூல் அணியில் இருந்து விலகுவது என்ற முடிவு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிகவும் கடினமான முடிவு என்று அவர் கூறியுள்ளார்.
இங்குள்ள அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியான செய்தியாகப் பார்க்கப்படுகின்றது.
அவர் இங்கிலாந்துக்குள் எந்த அணிக்கும் விளையாடுவதை தவிர்க்க விரும்பியதாக கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு உள்ளே பிற அணிகளுக்காக விளையாடினால், தான் லிவர்பூலுக்கு எதிராக ஆட நேரிடலாம் என்பதால் அவர் அதனை தவிர்த்துள்ளார்.