Designed by Iniyas LTD
இங்கிலாந்தில் கிளப் கால்பந்து பிரிமியர் லீக் போட்டி
இங்கிலாந்தில் கிளப் கால்பந்து அணிகளுக்கான பிரிமியர் லீக் போட்டி பிரபலம் வாய்ந்தது. 2015-16-ம் ஆண்டுக்கான போட்டியில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் செல்சியா-டோட்டனம் ஹாட்ஸ்புர் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் டோட்டனம் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில், செல்சியா மாற்று வீரர் ஈடன் ஹசார்ட் கடைசி நேரத்தில் கோல் போட்டு அவர்களின் கனவை சிதைத்து விட்டார். இதன் மூலம் இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ள நிலையிலேயே லீசெஸ்டர் சிட்டி அணி 77 புள்ளிகளுடன் (36 ஆட்டம் , 22 வெற்றி, 11 டிரா, 3 தோல்வி) முதலிடத்தை உறுதி செய்து, பட்டத்தை கைப்பற்றியது. 132 ஆண்டு கால பழமையான லீசெஸ்டர் கிளப் அணி, இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். டோட்டனம் அணி 70 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.