தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இங்கிலாந்தில் மசூதிக்கு தீ வைப்பு- விக்ஷமிகளின் செயல்

இங்கிலாந்து நாட்டில் உள்ள  லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு சமூக விரோத சக்திகள் சிலர்  தீ வைத்த சம்பவம் பரபரப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது.

குறித்த  மசூதிக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.45 மணிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்துள்ளனர்.

அதேவேளை அடுத்த சில நிமிடங்களில் இங்கிலாந்தின்  லேடி பிட் சந்து பகுதியில் அமைந்து உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருநானக் நிஷ்கம் சேவாக் ஜாதா குருத்வாராவுக்கும்  பெட்ரோலை ஊற்றி விஷமிகள் தீ வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

விரைந்து வந்த  தீயணைப்பு படையினர்  மசூதியிலும், குருத்வாராவிலும்  தீயை அணைத்துள்ளனர்.

இந்த விபத்து  தொடர்பில் லீட்ஸ் நகர பொலிஸார் தெரிவிக்கையில்  இவ்விரு சம்பவங்களும் அருகருகே நடந்து உள்ளன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் என சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், சம்பவ பகுதியில் அமைந்து உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வதகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த  சம்பவங்களை அடுத்து  லீட்ஸ் நகரில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...