Designed by Iniyas LTD
இங்கிலாந்து – நியூசுலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் இருக்கிறது.
இங்கிலாந்து– நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 350 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக லதம் (84), ரோஞ்சி (88) அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து சார்பில், ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியும் 350 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் ஆடம் லைத் (107) சதம் அடித்தார். அணித்தலைவர் குக் (75) அரைசதம் எடுத்தார். பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர் சவுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணியில் லதம் (3), வில்லியம்சன் (6) நிலைக்கவில்லை. குப்தில்– ரோஸ் டெய்லர் ஜோடி ஓட்ட வேகத்தை அதிகரித்தது.
குப்தில் 70 ஓட்டங்களிலும், டெய்லர் 48 ஓட்டங்களிலும் வெளியேறினர். அதன் பின் அணித்தலைவர் மெக்குல்லம்– வாட்லிங் ஜோடி சிறப்பாக விளையாடியது.
மெக்குல்லம் 55 ஓட்டங்களிலும், ரோஞ்சி 31 ஓட்டங்களிலும் வெளியேறினர். சிறப்பாக விளையாடிய வாட்லிங் சதம் அடித்தார்.
3வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 338 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது. வாட்லிங் 100 ஓட்டங்களுடனும், கிரேன் 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.