தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் இரத்தத்தில் இந்திய மரபணு …! ?

david4_110513114809இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் இரத்தத்தில் இந்திய மரபணு காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இங்கிலாந்தின் குடும்ப உறவுகள் குறித்த இணையத்தளமான ‘பைன்ட் மை பாஸ்ட்’ இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
டேவிட் கமரூனின் குடும்ப உறவு வழி தொடர்பில் இந்தியர்களின் மரபணுவை கொண்டவர் என்பது உறுதியாகுவதாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 1816ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய வில்லியம் தாக்கரே என்பவரது நெருங்கிய உறவுமுறை பரம்பரையிலேயே கமரூன் பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கமரூனின் மூதாதையர்களது குடும்பத்திற்கும், இந்தியர்களுக்கும் இடையில் நெருங்கிய வர்த்தக உறவுகள் காணப்பட்டதாகவும், சில சந்தர்ப்பங்களில் அவை திருமண பந்தமாக மாற்றமடைந்துள்ளதாகவும் குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 இதேவேளை, இங்கிலாந்து இளவரசர் வில்லியமது இரத்தத்திலும் இந்திய மரபணு உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...