தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஃபின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை

உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதல் போட்டியிலே இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஃபின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.james_anderson_out

உலகக்கிண்ண தொடரின் முதல் நாளான நேற்று, இங்கிலாந்து- அவுஸ்திரேலிய அணிகள் மெல்போர்ன் நகர மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின.

இதில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அப்போது கடைசி ஓவரை வீச ஸ்டீவன் ஃபின் வரவழைக்கப்பட்டார்.

முதல் மூன்று பந்துகளும் ஓட்டங்கள் எடுக்கப்பட்ட நிலையில், 4வது பந்தில் பிராடிடம் பிடி கொடுத்து 31 ஓட்டங்களில் ஹாடினும், 5வது பந்தில் ஜோ ரூட்டிடம் பிடி கொடுத்து 66 ஓட்டங்களில் மேக்ஸ்வெல்லும், கடைசி பந்தில் ஜேம்ஸ் ஆன்டர்சனிடம் பிடி கொடுத்து ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஜான்சனும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

எனவே ஆட்டத்தின் கடைசி மூன்று பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார் ஃபின்.

நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் முதல் ஹாட்ரிக் சாதனை, முதல் நாளிலேயே நிகழ்ந்துள்ளது. உலகக்கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் எடுத்த முதல் ஹாட்ரிக் இதுவாகும். மொத்தத்தில் இது 7வது ஹாட்ரிக் சாதனையாகும்.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...