Designed by Iniyas LTD
இசைஜானிக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கியுள்ளார் ஜனாதிபதி
இந்திய மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25 ம் திகதி மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய பதிவு
இந்நிலையில், இன்று மாலை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விருது விழாவில் இசைஜானிக்கு ஜனாதிபதி கோவிந்த் விருதை வழங்கியுள்ளார்.
அவரை தொடர்ந்து மற்றவர்கள் விருதுகளை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
குறித்த நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
