Designed by Iniyas LTD
இடம்பெயர்ந்துள்ள மக்களை பாதுகாக்க வேண்டியது உமர் அப்துல்லாவின் கடமை – அமித் ஷா
பாகிஸ்தான் தரப்பில் அத்துமீறி நடத்தப்படும் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார் .இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையிலும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தலைவர் அமித் ஷா, அம்மாநில கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது நடந்த கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் தரப்பில் அத்துமீறி நடத்தப்படும் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்.மேலும், பாகிஸ்தானின் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை பாதுகாக்க வேண்டியது உமர் அப்துல்லாவின் கடமை.ஆனால், இடம்பெயர்ந்த மக்களை சந்திக்காத அவர் காயமடைந்தவர்களின் நெஞ்சை புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ளார்