Designed by Iniyas LTD
இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம்! – கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை
போரால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் நேற்று மாலை கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், காணி உரிமைக்கான மக்கள் ஒன்றியம், பிரஜா அபிலாச வலையமைப்பு ஆகியன இணைந்து கையெழுத்து சேகரிப்பில் ஈடுபட்டன.
நேற்று காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது. கையெழுத்துக்களைச் சேகரித்து, கொழும்பில் பல்வேறு தரப்பினருக்கும் மனுக் கையளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.




