தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக புதிய படையணி…

இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின்  மீது மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு இணையத்தள தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காகவே இந்த படையணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களிலும், இந்த படையணியின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

,

Comments
Loading...