Designed by Iniyas LTD
இந்தியாவிடம் வீழ்ந்தது ஸ்ரீலங்கா!
ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்ரீலங்கா அணி இந்தியாவிடம் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இந்த தோல்வியோடு ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து ஸ்ரீலங்கா அணி வெளியேறுகிறது. அதேவேளை இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொண்டது.
பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ஸ்ரீலங்கா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, ஸ்ரீலங்காவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்ரீலங்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஸ்ரீலங்கா அணியின் சந்திமால் மற்றும் அனுபவ வீரர் தில்ஷான் ஆகியோர் களமிறங்கினர். பவர் பிளே ஓவர்களில் அடித்து ஆட முற்பட்டு ஸ்ரீலங்கா அணியின் முதல் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.
ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைக் குவித்தது. கபுகெதர 30 ஓட்டங்களையும், சிறிவர்தன 22 ஓட்டங்களையும் குவித்தனர். மெத்தியூஸ் (18), தில்ஷான்(18), திசர பெரேரா 17 ஓட்டங்கள் வீதம் பெற்றனர்.
ஸ்ரீலங்கா வீரர்கள் இரண்டு பேர் வைட் பந்தில் ஸ்டெம்பிங்கும், நோபோல் பந்தில் பிரீ ஹிட்டை வீணாக்கியது மட்டுமின்றி விக்கெட்டையும் பறிகொடுத்து சொதப்பினர்.
139 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இந்தியாவின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் சொற்ப ஓட்டங்களுக்கு வீழ்ந்தாலும் அதன் பிறகு ஜோடி சேர்ந்த கோஹ்லி மற்றும் ரெய்னா ஆகியோர் அதிரடியாக ஆடினர். இதில் ரெய்னா 25 ஓட் டங்களு டன் ஆட்டமிழக்க அடுத்து வந்த யுவராஜ் நிலைத்து நின்று 35 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லி இறுதி வரை ஆட்ட மிழக்காமல் 56 ஓட்டங்களை விளா சினார், யுவராஜ் ஆட்டமிழந்ததும் டோனி களமிறங்கினார். இந்த ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் டுக்களால் வெற்றிபெற்றது.