Designed by Iniyas LTD
இந்தியாவின் உதவியில் மலையகத்தில் 4000 வீட்டு திட்டம் ஆரம்பம்!
இந்திய அரசாங்கத்தின் மலையகத்துக்கான வீடமைப்புத்திட்டம் நேற்றுமுன்தினம் டன்சினன் தோட்டத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கோ. சின்ஹா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2.6 பில்லியன் டொலர் நிதியுதவியில் மலையத்தில அமைக்கப்படவுள்ள 4000 வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக 1134 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டுமானப்பணியாக டன்சினன் தோட்டத்தில் 404 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா, அமைச்சர்களான மனோகணேசன், பி.திகாம்பரம், வி. இராதா
கிருஷ்ணன், இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இங்கு அமைச்சர்களான மனோ, திகாம்பரம் மற்றும் இராதா ஆகியோர் உரையாற்றினர்.