Designed by Iniyas LTD
இந்தியாவின் ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுத் தாக்குதல் மிரட்டல்
இந்தியாவின் ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுத் தாக்குதல் மிரட்டல்
இந்தியாவிலுள்ள முக்கிய ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜுன் மாதம் முதல் தொடர் குண்டுகள் வெடிக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் உசார்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், ஐ.எஸ். அமைப்பின் பெயரில் வந்துள்ள இந்த அனாமதேய எச்சரிக்கை குறித்து தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் குறிப்பிட்டுள்ளன.