தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 31 பேர் கைது…

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த பங்களாதேசத்தைச் சேர்ந்த 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில், 8 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்கள் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்களால் சமர்பிக்க இயலவில்லை. பிறகு அவர்கள் பங்களாதேசின் பகர்கத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியதாக பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த அவர்கள் பெங்களூரில் வசித்து, சிறு வேலைகள் செய்து வந்தததாகவும்  விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

 

Comments
Loading...