Designed by Iniyas LTD
இந்தியாவிற்கு சிகரெட் கடத்தப்படுவது நான்கு மடங்கு அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு அறிக்கை
இந்தியாவுக்கு சிகரெட் கடத்தப்படுவது நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சிகரெட்,புகையிலைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ள புகையிலைப் பொருட்களின் புள்ளிவிவரம் இதை உறுதிப்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த கடத்தல்களால் அரசுக்கு 2014 -15ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்து சிகரெட், புகையிலைப் பொருட்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.