தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் ஜியோவை பின்னுக்குத் தள்ளிய வைபை டப்பா?

இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை முதன்மையானது. ஜியோவின் சலுகைகள் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை கதிகலங்கச் செய்துள்ளது.

ஜியோ சேவை தனது சலுகைகளை வாரி வழங்கி ஏராளமான வாடிக்கையாளர்களை தம் வசம் இழுத்துள்ளது. இதையடுத்து பிற நிறுவனங்களும் தமது சலுகைகளை அதிரடியாக அறிவிக்கத் தொடங்கின. இந்நிலையில் சற்றும் எதிர்பார்காத வகையில் பெங்களூருவைச் சேர்ந்த புதிய நிறுவனமான ”வைஃபை டப்பா” (Wifi Dabba) களத்தில் இறங்கியுள்ளது.
இந் நிறுவனம் ஜியோவிற்கு சாவால்விடும் வகையில் தனது சலுகைகளை வழங்கியுள்ளது.

இதுவரை காலமும் ஜியோ சேவையே மிகவும் குறைவான கட்டணம் வசூழிக்கும் சேவையாக கருத்தப்பட்டது. தற்சமயம் இந்த இடத்தை Wifi Dabba தட்டிப்பறித்துள்ளது. இச் சேவை இணைப்பைப் பெற ரூ.4,000 வரை செலவாகிறது. அழைப்பு விடுத்த 6 நாட்களில் வைஃபை டப்பா வசதியைப் பெற்றுவிட முடியும். மேலும் 1,800 பேர் இச் சேவை வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 14 மாதங்களே ஆன நிலையில் இந்த அதிரடி விலைக்கழிவு சலுகைகள் மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதன் விலைக்கழிவுகளாக,
Price Data Validity

Rs.2 100MB 24HR
Rs.10 500MB 24HR
Rs.20 1GB 24HR

Comments
Loading...