தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் விரைவில் ஸ்மார்ட் ரயில்!

f07d5047bdfa0c2580b3276fb0b042f4_XLவிமானங்களில் உள்ளது போல நீங்கள் ரெயில் படிக்கட்டு அருகே சென்றவுடன் ஒரு அழகான இளம் பெண் உங்களை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தது உண்டா? 
 
இந்த கற்பனை விரைவில் நிஜமாக போகிறது. டெல்லி – ஆக்ரா இடையில் கதிமான் எக்ஸ்பிரஸ் என்ற அதிவேக ரெயில் விரையில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 25-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள ரெயில் பட்ஜெட்டில் வெளியிடப்படவுள்ளது.
 
இந்தியாவின் முதல் செமி-அதிவேக ரெயிலான கதிமான் எக்ஸ்பிரஸில் விமானத்தில் இருக்கும் பெரும்பால வசதிகள் இடம்பெறவுள்ளது. விமானங்களில் உள்ளது போல் பணிப்பெண்கள், பயணிகள் இருக்கும் பெட்டிகளை அறிந்து கொள்ளும் வகையில் ஜி.பி.எஸ். நேரடி டி.வி. நிகழ்ச்சிகள், மெல்லிசை பாடல்கள், இந்திய மற்றும் பிற நாட்டு உணவுகள், ஆட்டோமேட்டிக் தீ அலாரம் ஆகியவை இடம்பெறும் என்று ரெயில்வே துறையை சேர்ந்த உயிர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கதிமான் எக்ஸ்பிரஸ் டெல்லி – ஆக்ரா இடையிலான 200 கிலோ மீட்டர் துரத்தை 105 நிமிடங்களில் சென்று அடையும். இதில் பயணிக்க குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ.690-ம், நவீன வகுப்பில் பயணிக்க ரூ. 1365-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Comments
Loading...