தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் வெளியானது யூடியூப் கோ பீட்டா பதிப்பு!

201704051250178738_youtube-go-beta-app-launched-in-india_SECVPFஇண்டர்நெட்டில் தெரியாத தகவல்களை தேடி தெரிந்து கொள்வதை போன்று, வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள வழி செய்யும் சேவை தான் யூடியூப். பொழுதுபோக்கில் துவங்கி செய்திகள், மற்றும் பல்வேறு தகவல்களை யூடியூப் மூலம் நாம் தினமும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின் வீடியோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் கூகுளின் ஆல்ஃபாபெட் இன்க் நிறுவனம் யூடியூப் கோ பீட்டா செயலியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த செயலி குறைந்த அளவு இண்டர்நெட் பயன்படுத்தி வீடியோக்களை ஸ்டிரீம் செய்யும் திறன் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதன் வரவேற்பை வைத்தே மற்ற நாடுகளிலும் யூடியூப் கோ வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
யூடியூப் கோ பீட்டா பதிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த செயலி எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இதனை ஆவலுடன் டவுன்லோடு செய்தோம்.
யூடியூப் கோ பீட்டா பதிப்பு செயலி மொத்தம் 6.51 எம்பி அளவு கொண்டுள்ளது. டவுன்லோடு முடிந்து இன்ஸ்டால் செய்யப்பட்டதும், செயலியை எந்த மொழியில் இயக்க வேண்டும் என்ற திரை முதலில் தெரிகிறது. இதில் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது.
Comments
Loading...