தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் ஹானர் ஹால்லி 4 பிளஸ் அறிமுகம்!

ஹூவாய் ஹானர் ஹால்லி 4 ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஹானர் ஹால்லி 4 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. சீனா மற்றும் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் கொண்டுள்ளது.

மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ள ஹானர் ஹால்லி 4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 0.3 நொடிகளில் இயங்கும் அதிவேக கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் ஹால்லி 4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் 1280×720 பிக்சல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
– அட்ரினோ 505 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட், EMUI 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4100 எம்ஏஎச் / 4000 எம்ஏஎச் பேட்டரி

கிரே, கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஹானர் ஹால்லி 4 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Comments
Loading...